Add us to your Address Book

Resposive and Interactive Web pages starts from Rs.1000/-

Get in Touch with Us



அன்னதான திட்டம்


     கோவிலில் தினந்தோறும் மதியம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களின் நிதியின் மூலம் மற்றும் நன்கொடைகள் மூலம் அன்னதானம் நடைபெற்றுவருகிறது.


    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள அன்னதான திட்டத்தின் கீழ் அருள்மிகு பாலமலை அரங்கநாதர் திருகோவிலில் தினமும் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்குகொள்ள விரும்பும் நன்கொடையாளர்கள் ரூ.1000/- (ருபாய் ஆயிரம் மட்டும்) செலுத்தினால் அவர்கள் விரும்பும் நாளில் அவர்கள் பெயரில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். அல்லது ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) தொகையை நிரந்தரமாக முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டியிலிருந்து வருடம் ஒரு நாளைக்கு அவர்கள் விரும்பும் நாளில் அவர்கள் பெயரில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.


    இத்திட்டத்திற்கு 80Gன் கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்குபெற விரும்பும் பக்தர்கள் திருக்கோவில் பரம்பரை அறங்காவலரைத் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


    தினமும் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானம் உண்டு மகிழ்கின்றனர். சித்ரா பௌர்ணமி, புரட்டாசி சனிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானம் உண்டு மகிழ்கின்றனர்.


நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும்

பாலமலை திருக்கோவிலின் நலனுக்காகவும், அன்னதான திட்டத்திற்காகவும் தங்களால் இயன்ற பொருளுதவி அல்லது பண உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்கொடை வழங்க பரம்பரை அறங்காவலரை அணுகவும். நன்றி!